Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

ஆங் சான் சூச்சி உட்பட முக்கிய தலைவர்கள் தடுப்புக்காவலில்:மியன்மாரில் நெருக்கடிநிலை

மியன்மாரில் ஆங் சான் சூச்சி உட்பட முக்கிய தலைவர்கள் ராணுவத்தால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆளும் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


அதன் தொடர்பிலான செய்திகளை வெளியிட முடியாமல் ஊடகங்கள், இணையம் ஆகியவற்றிற்கு மியான்மாரில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் ராணுவம் நெருக்கடிநிலையை அறிவித்துள்ளது. ஓராண்டுக்கு நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் போவதாக ராணுவம் கூறியது.
அரசாங்கத்திற்கும் சக்திவாய்ந்த ராணுவத்திற்கும் இடையில் பல நாட்களாக நிலவும் அரசியல் பதற்றம் மிகுந்த சூழ்நிலை, ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.

தேர்தல் மோசடி நடந்துள்ளதாக ராணுவம் குறை கூறி வருகிறது.
சூச்சியும், அதிபர் வின் மின்ட் (Win Myint), பிற தலைவர்களும் அதிகாலையில் அழைத்துச் செல்லப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மியோ ந்யூண்ட் (Myo Nyunt) ராய்ட்டர்ஸ் செய்தியிடம் தொலைபேசியில் கூறினார்.

மக்கள் அவசரமாக ஏதும் செய்ய வேண்டாம் என்றும், அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர் தானும் தடுப்புக்காவலில் வைக்கப்படக்கூடும் என்றும் கூறினார்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big