Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்! அதிர்ச்சியில் உலக நாடுகள்

இங்கிலாந்தில் புதிய வைரஸ் வேகமாக பரவுவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாட்டின் மிகக் கடுமையான ஊரடங்கை அறிவித்தார். "வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, ​​நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும்," என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்புகளில் இருந்து தங்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு வைரசும் மிரட்டுவது அரசுகளுக்கு மிகுந்த பீதியை கொடுத்து இருக்கிறது.

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு இது பாதியாக இருந்தது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்ப வளர்சிதை மாற்றம் அடைந்திருப்பததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை காட்டிலும் வேகமாக பரவும் தன்மை உடையதாகவும், வீரியமாக இருப்பதாவும் தெரியவந்து உள்ளது.

இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் இத்தாலி, இந்தியா, சவூதி, ஆஸ்திரியா, இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இங்கிலாந்துடனான விமான போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளன.

பிரிட்டனில் புதியவகை கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவுவதை அடுத்து டுவிட்டரில் #COVID20 ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

புதிய வகை கொரோனா வைரஸ் தாக்கத்தால் இங்கிலாந்தில் புதியக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். மேலும், வைரஸ் பரவலைத் தடுக்க பல ஐரோப்பிய நாடுகளும்,

கனடா, டென்மார்க், ஈரான், குரேஷியா, பல்கேரியா, அயர்லாந்து, துருக்கி, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஹாங்காங், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, பெல்ஜியம், சிலி, மொராக்கோ, குவைத், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இங்கிலாந்துக்கு விமான போக்குவரத்தை ரத்து செய்து விட்டன.

அதேநேரம் சவுதி அரேபியாவோ, அனைத்து நாடுகளுக்கும் விமான சேவையை ரத்து செய்து, தனது எல்லைகள் அனைத்தையும் மூடி விட்டது. இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இந்தியாவும் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களும் இந்தியா வர நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் டிசம்பர் 31 ஆம் தேதி தடை விதித்து உள்ளது.

பொதுவாக, வைரஸ்களைப் பொறுத்தவரை, அவை பரவப் பரவ பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டே இருக்கும். அதனால்தான் வருடந்தோறும் புதிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த ஆண்டு சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே அது உருமாற்றம் அடைந்துகொண்டேதான் இருக்கிறது.

இங்கிலாந்து, இத்தாலி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் பரவிவரும் புதிய வகை கொரோனா வைரஸ் எளிதாக பரவுவதற்கான 70 சதவீத காரணிகளைக் கொண்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி வைரஸ் நிபுணர்கள் கூறுகையில், எளிதாகவும் விரைவாகவும் பரவுவதற்கான காரணம் இதுவரை தெளிவாகக் கண்டறியப்படவில்லை. அவை தடுப்பூசிகளின் பலன்களை பாதிக்குமா அல்லது நோய்த்தொற்றைப் பரப்புமா என்பது அடுத்தடுத்த ஆய்வு முடிவுகளில்தான் தெரியவரும்.

இதுகுறித்து பிரிட்டிஷ் அரசின் தலைமை அறிவியல் ஆலோசகர் பாட்ரிக் வால்லன்ஸ் கூறியதாவது:-

தற்போது பரிணாம மாற்றமடைந்துள்ள புதிய வைரஸானது மற்ற வைரஸ்களைவிட எளிதில் பரவக்கூடிய வகையில் இருப்பதாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால், இவை மிகவும் ஆபத்தானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கின்றனர். மேலும், இந்த வைரஸானது பரவுவதில் அதிக வீரியம் காட்டுகிறது என்றும், டிசம்பர் மாதத்துக்குள் லண்டனில் 60 சதவீதம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்படும் என்றும்

இந்தப் புதிய வகை பரிணாமத்தில் பல பிறழ்வுகள் இருக்கின்றன. அதில் பலவற்றில் வைரஸ்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளக் கூடியதும், செல்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதுமான ஸ்பைக்கி புரதங்கள் இருக்கின்றன. அந்த ஸ்பைக்குகள்தான் தற்போதைய தடுப்பூசிகளை குறிவைத்துள்ளது என கூறினார்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் டாக்டர் ரவி குப்தா கூறும் போது இதுகுறித்து கவலைப்படுவதாகக் கூறியிருக்கிறார்.

மேலும், அவரும் பல ஆராய்ச்சியாளர்களும் இணைந்து இதுகுறித்து தங்களுடைய வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டதாகவும், ஆனால் அது முறையாக மதிப்பாய்வு செய்யப்படாமல், மற்ற பத்திரிகைகளில் வெளியிடப்படாமல் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சியாட்டிலைச் சேர்ந்த உயிரியல் நிபுணரும், மரபணு வல்லுநருமான ட்ரெவர் பெட்போர்டு கூறும் போது

பொதுவாகவே வைரஸ்கள் பரிணாம வளர்ச்சி அடையும்போது தங்கள் மரபணுவில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ளும். இது ஒரு குறிப்பிட்ட பகுதி அல்லது நாடுகளில் புதிதாக பரவும்போது பொதுவாகக் காணப்படக்கூடிய மாற்றம்தான்.

இதுதான் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ள கொரோனா வைரஸிலும் நடக்கலாம் என்று சமீபத்திய சான்றுகள் எடுத்துரைப்பதாக கூறியிருக்கிறார்.

மேலும், தற்போது பலவகை தோற்றங்கள் மற்றும் வகைகளைக் கொண்ட வைரஸ் பரவலைப் பார்க்கமுடிகிறது. இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு எதிர்ப்பைக் காட்டுவதாக இருக்கிறது.

வைரஸுகளின் மரபணுவில் பிறழ்வுகள் அதிக அளவில் இருக்கும்போது தடுப்பூசிகள் குறை மதிப்பிற்கு உட்படுத்தப்படும். எனவே, காலத்திற்கு ஏற்றவாறு தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டும். இந்த மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியம் ..

இந்தப் புதிய வகை கொரோனா வைரஸைப் பொறுத்தவரையில், கவலைகொள்வதைக் காட்டிலும், அரசுகளும் ஆராய்ச்சியாளர்களும் கவனத்துடன் அணுக வேண்டியதே இப்போதைய நிலையாக இருக்கிறது என கூறினார்.

அமெரிக்க உணவு மற்று மருந்து ஆணையர் ஸ்காட் காட்டிலேப் கூறும் போது

ஏப்ரல் மாதத்தில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மரபணு மாற்றங்களைக்கொண்ட ஒரு வைரஸைக் கண்டறிந்தனர். இது சுமார் இரண்டு மடங்கு தொற்றுநோயைப் பரப்பக்கூடிய வீரியம் கொண்டதாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

இந்த வைரஸ் பாதிப்பு கிட்டத்தட்ட 6000 பேருக்கு இருந்தது கண்டறியப்பட்டது. அதில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் டென்மார்க்கில் அதிக பாதிப்புகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே பழைய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தப் புதிய வைரஸ் பாதிக்குமா? அது தடுப்பூசியின் வீரியத்தை குறைத்துவிடுமா? அநேகமாக தடுப்பூசி வீரியம் குறையாது என கூறினார்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big