முன்னாள் மீன்பிடி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி பச்சை மீனை சாப்பிட்டுக் காட்டி கொவிட்-19 வைரஸ் அச்சத்தை தவிர்த்து மீன்களை உண்ணுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் மீன்களைக் கொள்வனவு செய்வதே மீனவர்களுக்காக செய்யக் கூடிய பெரிய சேவையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொவிட்-19 வைரஸை மீன்கள் காவிச் செல்வதாக மக்களிடையே நிலவும் அச்சம் காரணமாக மீன் பிடிச் சமூகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்களை விற்க முடியாமல் போனதால் அவர்கள் அவநம்பிக்கையான நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இரண்டு மீன்களை பையில் எடுத்து வந்த முன்னாள் அமைச்சர் திலிப், பையிலிருந்து ஒரு மீனை எடுத்து பச்சையாக சாப்பிட்டுக் காட்டியதுடன் இவை புதிய மீன்கள் எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பான விடயம் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
Post a Comment
0 Comments