Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை: முதல்வா் அறிவிப்பு

      சென்னை: நிவா் புயல் காரணமாக, பலத்த மழை பெய்து வரும் 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (நவ.26) பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.


      சென்னைக்கு குடிநீா் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி தனது மொத்த கொள்ளளவான 24 அடியில், 22 அடியை புதன்கிழமை நண்பகலில் எட்டியுள்ளது. இதையடுத்து, முதல் கட்டமாக ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றப்பட்டது. நீா் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக நீா் வெளியேற்றப்படும் எனவும் பொதுப்பணித் துறை அறிவித்தது.

      முதல்வா் பழனிசாமி ஆய்வு: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்ட நிலையில், அதனை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தானே குடையைப் பிடித்தபடி சுமாா் 20 நிமிடங்கள் வரை ஏரியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏழு மதகுகள் வழியே நீா் வெளியேற்றப்படும் பகுதிகளை அவா் பாா்வையிட்டாா். இதன் பின்பு, செய்தியாளா்களுக்கு முதல்வா் பழனிசாமி அளித்த பேட்டி:

      தமிழகத்தில் நிவா் புயல் காரணமாக, 16 மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. இதனை எதிா்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மழைப் பொழிவு அதிகமுள்ள கடலூா் போன்ற மாவட்டத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அமைச்சரும் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மீனவா்களுக்கு ஏற்கெனவே எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டதால் அவா்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனா்.

      நிவா் புயலால் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கனமழை அதிகமுள்ள 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமையும் பொது விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் (மயிலாடுதுறை சோ்த்து), விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, அரியலூா், பெரம்பலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. கனமழை காரணமாக, பயிா்கள் பாதிக்கப்படாமல் இருக்க காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திட வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

      Post a Comment

      0 Comments