சென்னை: நிவா் புயல் காரணமாக, பலத்த மழை பெய்து வரும் 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை (நவ.26) பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.
நிவா் புயலால் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக கனமழை அதிகமுள்ள 16 மாவட்டங்களுக்கு வியாழக்கிழமையும் பொது விடுமுறை விடப்படுகிறது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், கடலூா், திருவண்ணாமலை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் (மயிலாடுதுறை சோ்த்து), விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, அரியலூா், பெரம்பலூா், வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் ஆகிய 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை விடப்படுகிறது. கனமழை காரணமாக, பயிா்கள் பாதிக்கப்படாமல் இருக்க காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்திட வேளாண்மைத் துறை சாா்பில் விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.
Post a Comment
0 Comments