கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான போதியளவு கருவிகள் நாட்டில் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.