இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது செயலியில் தமிழ் மொழியை இணைத்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தொடர் பண்டிகை நிகழ்வுகள் வருவதால் பண்டிகை நிகழ்வுகளை கணக்கில் வைத்து கொண்டு ஆன்லைன் வணிகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பல நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன.
குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது அதற்கான சலுகை விற்பனை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் தனது செயலியில் தமிழ் மொழியை இணைத்துள்ளது.
இந்த புதிய வசதி மூலம் பொருட்களை பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் சலுகைகளை அறிந்திட, பொருட்களை வாங்கும் போது தங்கள் இருப்பிடத்தை குறிப்பிட, பணம் செலுத்த, பணபரிமாற்றம் செய்ய முடியும். இது வாடிக்கையாளருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
Post a Comment
0 Comments