Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

சுற்றுலாப் பயணிகளுக்கு "Eiffel Tower"க்கு செல்ல அனுமதி.!

இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில்(Paris-Fr) உள்ள "Eiffel Tower"ஐ காண முடியும். இன்று முதல் "Eiffel Tower" திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். 

Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. 


பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 மீட்டர் உயரமுள்ள இந்த டவரை காண அந்நாட்டு மக்கள் மற்றும் உலக மக்கள் பலர் வருவதுண்டு. 

அதிகளவில் கூட்டம் வருவதால் வைரஸ் தோற்று அதிகம் பரவும் என்ற அச்சத்தால் இதை ஒரு முன்னெச்சரிக்கையாக மூட முடிவு செய்யப்பட்டது. பாரிஸில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் மூலம் ஈபிள் டவர் மூடப்பட்டது. 

இந்த மாபெரும் ஈபிள் டவரை தற்போது மக்கள் பார்க்கும் பொருட்டு இப்போது மீண்டும் திறக்கப்படுகிறது. இருந்தாலும்  குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே ஈபிள் டவர்க்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேல் தளத்திற்கு செல்லும் லிஃப்ட் கூட இப்போது மூடப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி. இந்த கோபுரத்தின் காட்சிகளை தூரத்திலிருந்து சில மக்கள் ரசிப்பதைக் காணலாம்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big