சுற்றுலாப் பயணிகளுக்கு "Eiffel Tower"க்கு செல்ல அனுமதி.!
Sooriyan TVFriday, June 26, 2020
இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாரிஸில்(Paris-Fr) உள்ள "Eiffel Tower"ஐ காண முடியும். இன்று முதல் "Eiffel Tower" திறக்க தயாராக உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஈபிள் டவர் மூடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஈபிள் டவர் இவ்வளவு நாள் மூடப்பட்டபோது இதுவே முதல் முறையாகம். Eiffel Tower உலக அதிசயத்தில் ஒன்றானது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
பிரான்சில் குறிப்பாக பாரிஸில் கொரோனா வைரஸ் பரவுவதைக் தடுக்க இந்த ஈபிள் டவர் மூடப்பட்டது. 324 மீட்டர் உயரமுள்ள இந்த டவரை காண அந்நாட்டு மக்கள் மற்றும் உலக மக்கள் பலர் வருவதுண்டு. அதிகளவில் கூட்டம் வருவதால் வைரஸ் தோற்று அதிகம் பரவும் என்ற அச்சத்தால் இதை ஒரு முன்னெச்சரிக்கையாக மூட முடிவு செய்யப்பட்டது. பாரிஸில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் மூலம் ஈபிள் டவர் மூடப்பட்டது.
இந்த மாபெரும் ஈபிள் டவரை தற்போது மக்கள் பார்க்கும் பொருட்டு இப்போது மீண்டும் திறக்கப்படுகிறது. இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே ஈபிள் டவர்க்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேல் தளத்திற்கு செல்லும் லிஃப்ட் கூட இப்போது மூடப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி. இந்த கோபுரத்தின் காட்சிகளை தூரத்திலிருந்து சில மக்கள் ரசிப்பதைக் காணலாம்.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Last updated: Oct-2024
(பொறுப்புத் துறப்பு: இங்கே பிரசுரிக்கும் செய்திகள்,கட்டுரைகள், காணொளிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. செய்திகள், தகவல் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. செய்திகளின் உண்மை தன்மையும் தாங்களே கண்டறிந்துகொள்ளுங்கள். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
இவ் இணைய பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் நீக்க பட வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் (info@sooriyantv.ca) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Social Plugin
Social Plugin