Type Here to Get Search Results !

#LiveTamilTV

ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் & சீமான் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அராஜகம் ஆரம்பம் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது. 

  • தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவிருக்கிறது.
  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
  • வேட்பாளர்கள் மிரட்டப்படுவது, அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைப்பது போன்ற செயல்களைத் தடுக்க மாநில தேர்தல் ஆணையம் தவறிவிட்டது - மக்கள் நீதி மய்யம்.
  • இந்த நிலயில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி அராஜகம் ஆரம்பம் ஆகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் பட்டியலின வேட்பாளரை அச்சுறுத்தி வாபஸ் வாங்கவைத்த அராஜகத்திற்கு, மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹெராயின்
ஆளுங்கட்சி அராஜகம் : கமல்ஹாசன் குற்றச்சாட்டு


உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர்களை திமுகவினர் மிரட்டுகிறார்கள் என அக்கட்சியின் தலைவர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழர் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருந்து இறந்து போன திலீபனின் நினைவு நாள் நாம் தமிழர் கட்சி சார்பில் போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மலர்தூவி மலர்வணக்கம் செலுத்தினர்.

ஹெராயின்

இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அதானி துறைமுகத்தில் 21,000 கோடி ஹெராயின் போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முன்பு எத்தனை கப்பல்களில் சென்று உள்ளது என்ற கேள்வி உள்ளது. கணவன், மனைவி மட்டும் இதில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டிருப்பது வேடிக்கையானது.

நாடு மயக்கம்

நாடு மயக்கம்

போதைப்பொருள் உள்ளே வந்தால் நாடு மயக்கத்திலே தான் இருக்கும். தனியார்மயத்தால் வரும் விளைவு இதுதான்.
மேட் இன் தமிழ்நாடு உருவாக வேண்டும் என்பதுதான் நமது கனவு. நாங்கள் அதை பேசும்போது சாத்தியமில்லை என்று பேசினார்கள். மேக்கிங் இந்தியாவாக இருக்கும்போது மேட் இன் தமிழ்நாடு என்று எப்படி கொண்டு வருவீர்கள்.

இனி அரசியல் சுத்தும்

இனி அரசியல் சுத்தும்

என்னை மையப்படுத்தி தான் இனி அரசியல் சுத்தும். திமுக உள்ளாட்சி தேர்தலில் ஆட்களை கடத்துகிறார்கள். பெண் வேட்பாளர்களை மிரட்டுகிறார்கள். அவர்களால் நாங்கள் தலைமறைவாக இருக்கிறோம். தேர்தலில் விலகி இருந்தால் பணமும், அரசு வேலையும், ஒப்பந்தமும் தருகிறோம் என்று கூறுகிறார்கள் என தெரிவித்தார்.

சீமான்

சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். பொதுவாக எல்லா தேர்தல்களுக்கும் பெண் வேட்பாளர்களுக்கும் ஆண் வேட்பாளர்களுக்கும் சரிசமமாக பிரித்து வாய்ப்பு கொடுத்திருந்தார் சீமான்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big