சீன வீரர்கள், நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்க, போருக்கு ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும் என்றுஅதிபர் ஜின்பிங் திடீரென உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பான சூழல் எழுந்துள்ளது.
லடாக் மற்றும் வடக்கு சிக்கிமில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அண்மையில் இந்திய மற்றும் சீனப் படைகள் குவிக்கப்பட்டு உள்ளது. இது போர்ப்பதற்றத்தை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீன ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜின்பிங் பிறப்பித்த உத்தரவு:
சீன வீரர்கள், நாட்டின் இறையாண்மையை உறுதியுடன் காக்கவும், போருக்கு ஆயுத்த நிலையில் இருக்க வேண்டும். வீரர்கள் பயிற்சியை கூட்ட வேண்டும். எந்தவொரு மோசமான சூழலுக்கும் ராணுவம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் எந்தவொரு குறிப்பிட்ட அச்சுறுத்தலையும் குறிப்பிடவில்லை என்றாலும், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றம் நிலவி வரும் நிலையில் ஜின்பிங் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் தென் சீன கடல் பகுதியில் அமெரிக்க ரோந்து கப்பல்கள் பணியில் உள்ளன. கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. சீனா மீதான விசாரணையை முன்னெடுக்க பல நாடுகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால், சீன அதிபரின் அறிவிப்பு அமெரிக்காவிற்கு எதிரானதா அல்லது இந்தியாவுக்கு எதிரானதா என்று விவாதிக்கப்படுகிறது.~
Social Plugin
Social Plugin