கனடாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் எண்ணிக்கை 6,639 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கிலேயே அதிகளவிலான மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அங்குமட்டும் 4139 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் ஒன்ராறியோவில் 2123 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை 936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது.
அந்தவகையில் கியூபெக்கில் 48 ஆயிரத்து 598 பேரும் ஒன்ராறியோவில் 26 ஆயிரத்து 191 பேரும் அல்பேர்ட்டாவில் 6,901 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை 34 ஆயிரத்து 669 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருவதோடு, 45 ஆயிரத்து 339 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
May-26-2020
May-26-2020
Social Plugin
Social Plugin