அதிர்ச்சியில் ஆழ்த்திய கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக இன்று (27) பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பை அதிர்ச்சியில் ஆழ்த்திய கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்களுக்கு எதிராக இன்று (27) பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரமான கொலைச் சம்பவத்தைக் கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பு நகரில் மாபெரும் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காந்திப் பூங்காவில் தொடங்கிய கவனயீர்ப்பு போராட்டம் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்றது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும், இந்த கொடூரச் சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் முன்னிலையாகக் கூடாது என்பதும் முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.









பாதிக்கப்பட்ட யுவதி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த 20 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து யுவதி ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு பெண்ணின் உடலம் மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், திருட்டுச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் அதியுயர் விலை கொண்ட மருத்துவப் பொருட்களை காவல்துறையினர் நேற்று நள்ளிரவு கைப்பற்றியுள்ளனர். சத்திரசிகிச்சைகளின் போது நினைவிழக்கச் செய்யப் பயன்படுத்தப்படும் வீரியம் மிக்க இந்த மருந்துகள் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
“இத்தகைய கொடூரங்கள் மீண்டும் நடக்காதபடி நீதியளிக்க வேண்டும்” என பொதுமக்கள் கோரிக்கை!
#Batticaloa #JusticeForVictims #SriLanka #Protest #BreakingNews #CrimeNews #StopViolence #PublicVoice #Justice #TrendingNews

Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Slider Images

Tamil Personal Computer Info