வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான எட்டுப்பேரில் 6 பேர் இன்று (27) கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடுகளை மேற்கொண்டனர்.
வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரியின் செயற்பாடுகள் தமிழர்களுக்கு எதிரான இனவாத ஒடுக்குமுறைகளை மேற்கொள்ளும் சிறீலங்கா பொலிசாருக்கு துணைபோவதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸாருக்கு துணைபோகும் வவுனியா மனித உரிமை ஆணையாளர்
இதன் காரணமாகவே கொழும்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள ஐ நா அலுவலகத்தில் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பான அதுகாரியுடன் நேரில் சந்திக்கவுள்ளனர்.
அத்துடன் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளரது பக்கச் சார்பானதும் நம்பகமற்றதுமான செயற்பாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதுடன் அதிகாரத் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட பொலிசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும் எனவும் அவர்கல் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் இடையூறுகள் இன்றி ஆலய வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சூழல் உறுதிப்படுத்தப்படல் வேண்டுமெனவும் கோரி மகஜர் ஒன்றும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் இன்று கையளிக்கப்பட்டது.


.jpg)
.jpg)


No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.