அடமழை பெய்து வரும் காரணமாக பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஊடாக அக்கறையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியில் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்துடன் இரணைமடு குளத்தின் அதிக அலவானநீர் வெளியேற்றப்படுவதன் காரணமாக வட்டக்கச்சி பெரியகுளம், கண்டா வளை நாகேந்திரபுரம் முரச மூட்டை ஜயங்குளம்ஆகிய பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு தமது வாழ்விடங்களை விட்டு இடைக்கால தங்குமிட முகாம்களுக்கு பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்.
அத்துடன் தற்பொழுது ஏற்பட்டுள்ள கடும் மழை காரணமாக முதலைகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதுடன்கால்நடைகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருவதுடன் பிரமந்னாறுபகுதியில் அன்றைய தினம்17.12.2023 இரவு முதலைக்கடிக்கு இலக்கான ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட மக்களுக்கான சமைத்த உணவினை பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம சேவையாளர்கள் முன்னெடுத்து வருவதுடன் வெள்ள அனத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விவரங்களை தொடர்ச்சியாக கிராம சேவையாளர்கள் இரவு பகல் பாராது தமது சேவையை முன்னெடுத்து வருவதை எம்மால் அவதானிக்க கூடியவாறு இருந்தவை குறிப்பிடத்தக்க விடயமாகும் அத்துடன் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் விபரங்களை தொடர்சியாக திரட்டிவருகின்றனர் கிராமவசேவையாளர்கள்.
Post a Comment
0 Comments