இலங்கை மற்றும் இந்திய கத்தார் வாழ் ஆளுமைகளை கெளரவிக்கும் ஸ்கை தமிழ் விருது விழா நவம்பர் 30ஆம் திகதி ஸ்கை தமிழ் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் அவர்களின் தலைமையில் இந்திய கலாசார மையம் அசோகா ஹோலில் நடைபெறது.
கத்தாரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஸ்கை தமிழ் விருது விழா!
Monday, December 04, 2023
0
இவ்விருது விழாவில் பிரதம அதிதியாக கத்தார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் மபாஸ் மொஹிதீன் அவர்களும் கௌரவ அதிதியாக இந்திய கலாச்சார மையத்தின் பொதுச் செயலாளர் மோகன் குமார் அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கையிலிருந்து இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரும்,இலங்கை தேசிய பத்திரிகையை தினகரன் வரமஞ்சரின் பிரதம ஆசிரியர் தே.செந்தில்வேலவரும், இந்தியாவில் இருந்து கழக சட்ட திட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகரனும், சேது தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு முஹம்மது ஜலீல், Al Wahaa குழுமம் நிறுவனத்தின் தலைவர் Dr. சர்புதீன் அப்துல் ரஹ்மான் மற்றும் கத்தாரில் சமூக வலைதளத்தில் பிரபல்யமாக உள்ள Maasha and Arshad கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவானது கல்வி, கலை,விளையாட்டு, வணிகம், சமூக செயற்பாடு, ஊடகத்துறை, எழுத்து துறை மற்றும் இலக்கியத்துறை போன்ற துறைகளில் சாதித்தோறுக்கன விருதுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
ஜே.எம்.பாஸித் - கத்தார்
Post a Comment
0 Comments