Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பொன்னியின் செல்வன்: யார் யாருக்கு என்ன கதாபாத்திரங்கள்.. அந்த கதாபாத்திரங்களின் சிறப்பு என்ன?.. பார்க்கலாமா!!

 அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் காவிய நாவல் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் விற்பனையாகும் புத்தகமாக இன்றும் கோலோச்சி வருகிறது.

அந்த கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும்.


அத்தனை கதாபாத்திரங்களுக்கு நட்சத்திர நடிகர்களை தேர்வு செய்ய முடியாமலே அந்த படம் பல ஆண்டு காலமாக கனவு படமாகவே இருந்து வந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அதனை பிரம்மாண்ட ஸ்டார் காஸ்டிங் உடன் சாதித்துள்ளார்.

சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்

சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்

ஆதித்த கரிகாலன், குந்தவை மற்றும் அருள் மொழி வர்மனின் தந்தை தான் சுந்தர சோழ மகாராஜா. ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் கதைக்கும் மூலக் காரணமே இவரும் இவரது அந்த சிம்மாசனமும் தான். முதலில் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக அமிதாப் பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் எழுந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இறுதியில் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ் தான் நடித்துள்ளார். படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தர சோழருக்கும் மந்தாகினி தேவிக்கும் என்ன சம்பந்தம் என்பது சூப்பர் ட்விஸ்ட் ஆக கதையில் அமைந்திருக்கும்.

பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்

பொன்னியின் செல்வனில் அடுத்து வெயிட்டான கதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்துள்ளார். வயதான காலத்தில் இளம் பெண் நந்தினியை திருமணம் செய்து கொண்டு தஞ்சைக்கு அழைத்து வந்து அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவார். சுந்தர சோழரின் இளையவர் மதுராந்தக சோழருக்கு முடி சூட்ட சூழ்ச்சி செய்வார். ஆனால், இவர் மனைவி நந்தினி ஒட்டுமொத்த சோழர் குலத்தையே இவரை பயன்படுத்தி அளிக்க திட்டமிடுவார்.

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ அரசனாக நடித்து அசத்திய பார்த்திபன் இந்த படத்தில் சின்ன பழுவேட்டரையராக நடித்துள்ளார். தஞ்சை கோட்டைக்குள் ஒரு தூசு கூட இவர் அனுமதி இல்லாமல் உள்ளே நுழையாது. அண்ணன் பெரிய பழுவேட்டரையர் திருமணம் செய்து கொண்ட நந்தினியின் வஞ்சத்தை அறிந்து அரசருக்கும் அவரது வாரிசுக்கும் காவலாக இருக்க பாடுபடுபவர்.

ஆதித்த கரிகாலன் - விக்ரம்

ஆதித்த கரிகாலன் - விக்ரம்

சுந்தர சோழ மன்னரின் மூத்த புதல்வர் ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம் நடித்துள்ளார். நந்தினி தேவியின் இளம் வயது காதலர். நந்தினி தேவியின் முதல் கணவர் வீர பாண்டியனின் தலையை இவர் கொய்ததாலே இவரை கொலை செய்யவும் சோழர் குலத்தை அழிக்கவும் பழிவாங்கும் நோக்கத்துடன் தஞ்சைக்கு வயதானவரை திருமணம் செய்து கொண்டு வருவார் நந்தினி. ஆதித்த கரிகாலனின் மரணத்துடன் முதல் பாகம் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நந்தினி - ஐஸ்வர்யா ராய்

நந்தினி - ஐஸ்வர்யா ராய்

சோழர் குலத்தையே வேறோடு சாய்த்து தனக்கும் வீர பாண்டியனுக்கும் பிறந்த குழந்தையை அரியணையில் அமர்த்த பெரிய பழுவேட்டரையருக்கு மனைவியாக வாக்கப் பட்டு தஞ்சைக்கு வந்து சேரும் வஞ்சம் தான் நந்தினி. ஆனால், அவருக்கும் சுந்தர சோழருக்கும் உள்ள உறவு எல்லாம் பொன்னியின் செல்வன் கதையில் செம ட்விஸ்ட்டாக அமைந்திருக்கும். மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் பெயர் வரக் காரணமும் இவரது கதாபாத்திரம் தான்.

வந்தியத்தேவன் - கார்த்தி

வந்தியத்தேவன் - கார்த்தி

பொன்னியின் செல்வன் கதையின் முக்கிய கதாபாத்திரமே வந்தியத்தேவன் தான். ஆதித்த கரிகாலனின் உத்தரவை ஏற்று சோழ நாட்டுக்கு வரும் வந்தியத்தேவனின் டிராவல் தான் பொன்னியின் செல்வன் கதையாக விரியும். அங்கே குந்தவையுடன் காதல் ஏற்பட அவர் உத்தரவை ஏற்று இலங்கையில் உள்ள பொன்னியின் செல்வனை அழைத்து வருவார். கார்த்தி வந்தியத்தேவனாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

குந்தவை - த்ரிஷா

குந்தவை - த்ரிஷா

ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழி வர்மனின் சகோதரி தான் குந்தவை. நடிகை த்ரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் அசத்தி உள்ளார். நந்தினி நகர்த்தும் காய்களுக்கு எதிர் காய்களை நகர்த்தி செக் வைக்கும் வேலையை குந்தவை சிறப்பாக செய்வார். இருவருக்கும் இடையே ஏற்படும் கிளாஷ் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.

அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி

அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி

அருள்மொழி வர்மன், ராஜ ராஜ சோழன், பொன்னியின் செல்வன் என இந்த கதையின் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. இலங்கையில் புத்த துறவிகளின் தலைவர் பதவியே வழங்கப்படும் நிலையில், சோழ நாட்டின் சேவைக்காக தான் அர்ப்பணிக்கப்பட்டவன் என அதை மறுப்பார். ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவி நடித்ததே அவருக்கு வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பெருமை என செல்லும் இடங்களில் எல்லாம் சொல்லி வருகிறார்.

பூங்குழலி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

பூங்குழலி - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி

தமிழ்நாட்டில் எல்லையில் இருந்து இலங்கைக்கு அருள்மொழி வர்மனை அழைத்துச் செல்லும் படகோட்டி பெண் பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். வந்தியத்தேவனையும் அதே போல அழைத்துச் செல்லும் போது தான் அந்த கதையை சொல்வார். யானையில் இவர் வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் ரசிகர்களை புல்லரிக்கச் செய்யப் போகிறது.

ஆழ்வார்க்கடியன் - ஜெயராம்

ஆழ்வார்க்கடியன் - ஜெயராம்

வந்தியத்தேவன் தஞ்சைக்கு வந்ததும் அவர் சந்திக்கும் முதல் ஆசாமி ஆழ்வார்க்கடியன் தான். அமைச்சரின் சீக்ரெட் ஏஜென்ட் வந்தியத்தேவன் எங்கெல்லாம் செல்கிறாரோ அவருக்கு முன்னாடியே அந்த இடத்தில் வேவு பார்ப்பார். செம காமெடியான கதாபாத்திரத்தில் ஜெயராம் சூப்பராவே ஸ்கோர் செய்வார் என்பது கன்ஃபார்ம்.

மற்ற கதாபாத்திரங்கள்

மற்ற கதாபாத்திரங்கள்

வானதியாக ந்டிகை சோபிதா துலிபாலா நடித்துள்ளார். பெரிய வேளாரராக பிரபு, கந்தன் மாறனாக விக்ரம் பிரபு, சேந்தன் அமுதனாக அஸ்வின், ரவிதாசனாக கிஷோர், மலையாமானாக லால், வீரபாண்டியனாக நாசர், சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், பார்த்திபேந்திர பல்லவனாக ரகுமான், குடந்தை ஜோசியராக மோகன் ராம் மேலும், பல நடிகர்கள் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big