Type Here to Get Search Results !

#LiveTamilTV

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டம்!!

இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களது உறவுகள் வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக முன்றலில் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கடந்த 2020.07.06 ஆம் திகதி பயங்கரவாத குற்றப்புலனாய்வுத் துறையினராலும், இலங்கை இராணுவத்தாலும் 3 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது யாழ் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை மனிதாபிமான முறையில் விடுதலை செய்ய வேண்டியும், பயங்கரவாத தடைச் சட்டதை நீக்க வலியுறுத்தியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெறுகின்றது.

குறித்த போராட்டத்தை மேற்கொண்டுள்ள உறவினர்கள் யாழ். மாவட்ட செயலருக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள குறித்த மூவரும் இன்று உண்ணாரவிதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

என் கணவர் குற்றவாளி என்றால் தண்டியுங்கள், சந்தேக நபராக சிறை வைக்காதீர்கள்! மனைவி உருக்கமான கோரிக்கை


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு வருடங்களாக தடுத்துவக்கப்பட்டுள்ள எனது கணவர் குற்றம் செய்திருந்தால் தண்டனை வழங்குங்கள். சந்தேக நபராக சிறையில் காலத்தை வீணடிக்காதீர்கள் என அவரது மனைவி உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய தினம் வடமாகாண ஆளுநர் செயலக முன்றலில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி இடம்பெற்ற போராட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றும் எனது கணவரை 2020ஆம் ஆண்டு விசாரணை என்ற அடிப்படையில் வரவழைத்து கைது செய்தார்கள்.

பின்னர் விடுதலைப் புலிகள் உருவாக்கம் என காரணம் கூறி எனது கணவரை தொடர்ந்தும் தடுத்து வைத்துள்ளனர்.

எனது கணவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கீழ் தங்கம் பாதுகாப்பு அமைச்சின் உள்ளடக்கப்படுகின்ற சிவில் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றுகின்ற நிலையில் எனது கணவர் தொடர்பான அனைத்து விவரங்கள் தொலைபேசி இலக்கங்கள் ஏற்கனவே பாதுகாப்புத் தரப்பிடம் இருக்கிறது.

இந் நிலையில் விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கம் என்ற போர்வையில் சந்தேக நபராக எனது கணவரை தடுத்து வைத்துள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீள் உருவாக்கப்படுகின்றனர் என்றால் அதை காண்பியுங்கள் பார்ப்போம்.

30 வருட வாழ்க்கையில் பத்து வருட வாழ்க்கையில் நான் முன்னாள் போராளியாக இருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு வெளியே வந்தேன்.

எங்களுக்கு திருமணமாகி மூன்று பிள்ளைகள் இருக்கின்ற நிலையில் யுத்த காலத்தில் நாங்கள் அனுபவித்த வேதனையை விட யுத்தம் முடிவடைந்த பின் அனுபவிக்கின்ற வேதனை அதிகமாக உள்ளது.

எனது கணவர் அவ்விதமான குற்றங்களும் செய்யவில்லை என எனக்கு தெரியும் குற்றம் செய்திருந்தால் அவர் செய்த குற்றத்தை நிரூபித்து தண்டனை வழங்குங்கள்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் எனது கணவர் அழைத்து வருவார் என நம்பிக்கையுடன் பல தடவைகளில் காலையிலிருந்து மாலை வரை காத்திருந்து ஏமாற்றம் அடைந்தேன்.

எனது கணவரை விடுதலை செய்வதற்காக பல இடங்களுக்கு இறங்கினேன் பயனளிக்கவில்லை. எல்லோரும் உணவுப் பொதிகளை தருகிறோம் என்கிறார்கள். எனக்கு எனது கணவர்தான் வேண்டும்.

20 மாதங்களுக்கு மேலாக எனது கணவரை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாக இருக்கின்றது. அவரை விடுவியுங்கள். நீங்கள் வழக்குக்காக அழைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அவரை அழைத்து வருவேன்.

ஆகவே, குற்றம் நிரூபிக்கப்படாமல் எனது கணவரை தொடர்ந்தும் சந்தேக நபராக தடுத்து வைக்காமல். விடுதலை செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big