ஐக்கிய அரபு அமீரகத்துக்கு உதவும் வகையில் போர்க்கப்பல், போர் விமானங்களை அனுப்ப உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் கூறியுள்ளார்.
போர் விமானங்களை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அனுப்பும் அமெரிக்கா..
Wednesday, February 02, 2022
ஏமன் நாட்டில் அரசுப்படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் கூட்டு படைகள் சவுதி அரேபியா தலைமையில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அணி திரண்டு நிற்கின்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த மாதம் அபுதாபியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினார்கள். அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் உள்ள எண்ணெய் நிறுவனமான ADNOC-யில் ட்ரோன் மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் இந்த தாக்குதலில் 3 ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி வெடித்துச் சிதறின. அந்த பகுதியே குழம்பாக காணப்பட்டது. இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் ஒரு பாகிஸ்தானியர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஐக்கிய அரபு அமீரகம் மீது ஏவுகணைகளை ஏவ தொடங்கியது.அமெரிக்க படைகள் தங்கியுள்ள தளத்தை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில் அதனை அமெரிக்க இராணுவம், தடுத்து அழித்தது.
போர் விமானங்கள், போர்க்கப்பல் மேலும், மூன்றாவதாக ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில் அதனை ஐக்கிய அரபு அமீரகமே தடுத்து நிறுத்தியது. இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வலு சேர்க்கும் வகையில் ஏவுகணை அழிப்பு சாதனம் கொண்ட போர்க்கப்பலையும், ஐந்தாவது தலைமுறை போர் விமானங்களையும் அனுப்புவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் உறுதி இதுதொடர்பாக அபுதாபி பட்டத்து இளவரசர் அபு பின் ஜாயித் அல் நஹ்யானிடம் தொலைபேசியில் பேசிய அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்படைக்குத் துணையாக யூஎஸ்எஸ் கோல் ( USS Cole) போர்க் கப்பல் அனுப்பப்படும் என உறுதி அளித்துளளார். இந்த போர்க் கப்பல் ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சாதனங்களைக் கொண்டதாகும். அமெரிக்கா துணை நிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அமெரிக்கா துணை நிற்கும் என்று கூறியுள்ள அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் 5 ஆம் தலைமுறை போர் விமானங்களையும், வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை அழிக்கும் யுஎஸ்எஸ் கோல் என்ற அமைப்பையும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
Social Plugin
Social Plugin