இராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்!
Sooriyan TVSaturday, November 27, 2021
இலங்கை ராணுவத்தின் மிக மோசமான கெடுபிடிகள், சுற்றி வளைப்புகளுக்கு நடுவே தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நினைவுகள் இடம்பெற்றன.
உலகம் முழுவதும் தமிழர்களால் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இராணுவம் கெடுபிடி
தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கில் நேற்று ராணுவத்தினரின் கடும் கெடுபிடிகள், சுற்றிவளைப்புகள், தாக்குதல்களுக்கு நடுவே மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணம் வல்வெட்டித் துறை தீருவில் திடலில் பெருமளவிலான தமிழர்கள் ஒன்று திரண்டு உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூர்ந்து பொதுச்சுடரேற்றினர். அப்பகுதியில் இலங்கை போலீசாரும் ராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர். அப்போது அஞ்சலி செலுத்த பொதுமக்கள் வைத்திருந்த தீபங்களையும் போலீசார் தட்டிவிட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
துப்பாக்கி முனையில் சுற்றி வளைப்பு
யாழ்ப்பாண்ம சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரை குற்றவாளிகள் போல போலீசாரும் ராணுவமும் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்து அச்சுறுத்தினர். இதனை பற்றி கவலைப்படாமல் சாட்டி துயிலும் இல்லத்திலும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
வடக்கு கிழக்கில்…
கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில், மன்னார் பெரியபண்டிவிரிச்சான், ஆட்காட்டி, மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களிலும் பொதுமக்கள் மாவீரர் நாள் நிகழ்ச்சிகளை நடத்தினர். தீவகப் பகுதியிலும் ராணுவத்தினரின் தடையை மீறி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. திருகோணமலையில் தமிழர்கள் பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை வணங்கினர்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் 2021ம் ஆண்டுக்கான "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்"
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்துகொண்ட 2021ம் ஆண்டுக்கான "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" நவம்பர் 27 அன்று உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது.
கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார்.
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கச் செயலாளருமாகிய கோ.ராஜ்குமார் அவர்களுக்கு நினைவேந்தலை அனுட்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்திலும் கடைபிடிப்பு
தமிழகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நேற்று நடத்தின. இதில் கொளத்தூர் மணி, வேல்முருகன் எம்.எல்.ஏ, திருமாவளவன் எம்.பி., சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுச்சுடரேற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
தேர்ச்சியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தளபதி விஜய்யின் முழுமையான பேச்சு - #விஜய் #மக்கள் #இயக்கம்.
Thalapathy Vijay Full Speech At Education Award Ceremony 2023 - Vijay Makkal Iyakkam #leo