Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

திருகோணமலையில் படகு கவிழந்து விபத்து! ஏழு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப்படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளன.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை தொடர்ந்தும் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிஞ்சாக்கேணி பகுதியில் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிந்த நிலையிலேயே குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

கிண்ணியா – குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகுப்பாதை விபத்தை அடுத்து, இன்று (24) காலை முன்னெடுக்கப்படவிருந்த பஸ் சேவைக்கு மக்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் சேவை, மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பஸ் குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொது மக்களால் பஸ் மறிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

News Source: News1st Tamil.



Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big