திருகோணமலை, கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் இழுவைப்படகு உடைந்து கவிழ்ந்ததில் இதுவரை 7 மரணங்கள் உறுதியாகியுள்ளன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.குறிஞ்சாக்கேணியிலிருந்து கிண்ணியாவிற்கு இன்று காலை முன்னெடுக்கப்படவிருந்த இலங்கை போக்குவரத்து பஸ் சேவை, மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பஸ் குறிஞ்சாக்கேணி பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது பொது மக்களால் பஸ் மறிக்கப்பட்டுள்ளது.
இதனால் பஸ்ஸில் பயணித்த பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் மீண்டும் வீடு திரும்பியதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Post a Comment
0 Comments