Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      விமானிகள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா? உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்...

      விமானங்களின் பைலட்களிடம் ஏராளமான மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களிடம் மூட நம்பிக்கைகள் அதிகமாக இருந்து வருகிறது. அதற்காக நகர பகுதிகளில் வசிப்பவர்களிடமும் மற்றும் படித்தவர்களிடமும் மூட நம்பிக்கைகள் இல்லை என அர்த்தம் கிடையாது. அவர்களிடமும் ஏராளமான மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இதற்கு விமானங்களின் பைலட்கள் மிகச்சிறந்த உதாரணம்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      ஆம், உண்மைதான். மிகவும் சவாலான பணியை செய்து வரும் விமானங்களின் பைலட்கள், பல்வேறு மூட பழக்க வழக்கங்களை வைத்துள்ளனர். இதன் மூலம் விமானம் பாதுகாப்பாக பயணிக்கும் என அவர்கள் நம்புகின்றனர். இப்படி பைலட்களிடம் இருந்து வரும் மூட நம்பிக்கைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      போட்டோ எடுக்க மாட்டார்கள்: நீங்கள் முண்டாசுபட்டி திரைப்படம் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறோம். போட்டோ எடுத்தால் துரதிருஷ்டம் ஏற்படும் என கிராமத்து மக்கள் நம்புவதாக இந்த படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த மூட நம்பிக்கையை ஒரு சில பைலட்கள் தற்போதும் கடைபிடிக்கின்றனர் என்பதை நம்புவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      விமானம் புறப்படுவதற்கு முன்பாக ஒரு சில பைலட்கள் வெளியே போட்டோ எடுத்து கொள்ள மாட்டார்கள். அப்படி போட்டோ எடுத்தால் துரதிருஷ்டம் ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை. இரண்டாம் உலக போரில் பங்கேற்ற டேவ் டூமே என்ற பைலட் இந்த விசித்திரமான மூட நம்பிக்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      பயணத்திற்கு ஒரு நாள் முன்பு அவர் தனது போட்டோவை எடுக்க அனுமதித்தார். அந்த நேரம் பார்த்து அவரது விமானம் தாக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக ஒரு இன்ஜின் உடன் அவர் திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிகிறது. இப்படி அந்த காலகட்டத்தில், போட்டோ எடுத்தால் துரதிருஷ்டம் ஏற்படும் என பைலட்கள் நம்பினர். ஆனால் தற்போதும் சிலர் இதனை நம்புவதுதான் வேடிக்கை.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      வானத்தை நோக்கி கை காட்ட மாட்டார்கள்: பைலட்களின் வேலை சுலபமாக இருக்க போகிறதா? அல்லது மிகவும் கடினமாக இருக்க போகிறதா? என்பதை தீர்மானிப்பதில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது. வானிலை மிகவும் மோசமாக இருந்தால், விமானம் பறப்பதற்கு அனுமதி வழங்கப்படாது. ஒருவேளை விமானம் ரத்து செய்யப்பட்டால், பைலட்களின் திட்டங்களில் மாற்றம் ஏற்படும்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      எனவே வானிலை நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பைலட்கள் விரும்புவார்கள். வானிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மூட நம்பிக்கையையும் அவர்கள் தீவிரமாக பின்பற்றி வருகின்றனர். ஆம், பைலட்கள் வானத்தை நோக்கியோ அல்லது சூரியனை நோக்கியோ ஒருபோதும் கையை காட்ட மாட்டார்கள்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      ஒருவேளை வானத்தை அல்லது சூரியனை நோக்கி கையை காட்டினால், வானிலை மோசமாகி விடும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆனால் இந்த விசித்திரமான மூட நம்பிக்கை எப்படி உருவானது? என்பதை பற்றி சரியாக தெரியவில்லை. எனினும் வானிலை மோசமாகி விடும் என்ற நம்பிக்கையில் இன்னமும் பல பைலட்கள் வானத்தை அல்லது சூரியனை நோக்கி கையை காட்டுவதே இல்லை.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      அதிர்ஷ்டமான பொருளை கழுவ மாட்டார்கள்: இதனை அழுக்கமான மூட நம்பிக்கை என கூறலாம். ஆனால் ஒரு சில பைலட்களிடம் இன்னமும் கழுவப்படாத பொருட்கள் நிறைய உள்ளது. முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போர் சமயங்களில் இருந்தே இந்த மூட நம்பிக்கை இருந்து வருகிறது. அதிர்ஷ்டமான பொருளை கழுவினால், அதிர்ஷ்டமும் சென்று விடும் என்பது ஒரு சில பைலட்களின் நம்பிக்கை.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      ஆனால் இந்த மூட நம்பிக்கையை பைலட்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினரும் நம்புகின்றனர். இதில், தடகள வீரர்கள் முக்கியமானவர்கள். தடகள வீரர்களிடம் கழுவாத ஷூ போன்ற பொருட்கள் இருப்பதை பார்க்க முடியும். கழுவினால் அதிர்ஷ்டம் கை விட்டு போய் விடும் என்ற மூட நம்பிக்கையே இதற்கு காரணமாகும்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      இத்தகைய மூட நம்பிக்கைகள் மட்டுமல்லாது, பல்வேறு சடங்கு, சம்பிரதாயங்களையும் பைலட்கள் பின்பற்றி வருகின்றனர். இதில், வாட்டர் சல்யூட் முக்கியமானது. ஒரு சில விமானங்கள் தரையிறங்கும்போது, இரண்டு பக்கமும் தீயணைப்பு வாகனங்கள் நின்று கொண்டு, விமானத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும். இதனை பார்த்தவுடன் ஏதோ பிரச்னை என நீங்கள் நினைத்து விட வேண்டாம்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      இது மரியாதை நிமித்தமாக செய்யப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும். அதாவது சம்பந்தப்பட்ட விமானத்தின் பைலட் ஓய்வு பெறுகிறார் என்றால், அவரை கௌரவிக்கும் விதமாக, விமான நிலையத்தில் வாட்டர் சல்யூட் மரியாதை வழங்கப்படும். இதேபோல் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து விட்டு வரும் வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்காகவும் வாட்டர் சல்யூட் மரியாதையை செய்வார்கள்.

      உலகையே சுற்றி வருபவர்களிடம் வினோத பழக்கம்... பைலட்கள் சூரியனை நோக்கி கை நீட்ட மாட்டாங்க... ஏன் தெரியுமா?

      மேற்கண்ட காரணங்களுக்காக மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு காரணங்களுக்காகவும் விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் மரியாதை செலுத்தப்படுகிறது. விமான போக்குவரத்து துறையில் இது மிக நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரியம் ஆகும். இதேபோல் கப்பல்களுக்கும் கூட தண்ணீரால்(Water Spray) மரியாதை செலுத்தப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

      Post a Comment

      0 Comments