Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      தமிழகத்தில் பள்ளிகள் இப்போதைக்கு திறக்கப்படாது: கல்வித் துறை அமைச்சர்

      மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான 10ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன. 

      • தமிழகத்தில், தற்போது, சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது.
      • இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பி பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன.
      • ஆன்லைன் வகுப்புகளை விரைவில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.                     

      தமிழகத்தில் கொரோனா தொற்று (Coronavirus) பரவல் காரணமாக, முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு, தற்போது, சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடர்கிறது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் முன்னரே ரத்து செய்யப்பட்டன. 

      பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 9 ஆம் வகுப்பு ஆண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
      இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் (Anbil Mahesh), பள்ளிகளைத் தற்போது திறப்பது குறித்து எதுவும் யோசிக்கவில்லை. மாணவர் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா வைஎரஸ் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத நிலையில், இப்போதைக்குப் பள்ளிகள் திறக்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.

      தமிழ்நாட்டில் (Tamil Nadu), வழக்கமான நடைமுறையில், கோடை விடுமுறை முடிந்து, ஜூன் முதல் வாரத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கப்படும்.  ஆனால், இந்த ஆண்டும், சென்ற ஆண்டை போலவே பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

      இந்நிலையில், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகளை துரிதமாக நிறைவேற்றி, ஆன்லைன் வகுப்புகளை விரைவில் தொடங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பிற்கான முதல் கட்ட  மாணவர் சேர்க்கை இன்று (ஜூன் 14) தொடங்கியுள்ளது. கொரோனா விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி, மாணவர் சேர்க்கை நடந்து வருவதாகவும், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் ஒரு வார காலத்துக்குள் நிறைவடைந்து, பாட புத்தகங்கள் விநியோகம் தொடங்கி விடும் எனவும் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். 

      Post a Comment

      0 Comments