புதிய அதிவேக மின்சார காரினை டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலோன் மஸ்க் அறிமுகம் செய்து வைத்து விற்பனையை துவக்கி வைத்துள்ளார்.
எப்போதும் மாற்றத்தினையும், அசத்தலான தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வதில் பெயர் போனவர் எலோன் மஸ்க்.
டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலோன், தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.
இந்த நிலையில் மாடல் எஸ் பிளேடு ((Model S Plaid))என்ற உலகின் அதிவேக மின்சார காரினை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்லா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
(Image Credits: Screenshot/Tesla) |
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஃப்ரீமாண்டி (( Fremont))நகரிலுள்ள தொழிற்சாலையில் மாடல் எஸ் பிளேடு காரின் அறிமுக விழா கடந்த 10ம் தேதி நடைபெற்றது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பார்வையாளர்கள் மட்டுமே விழாவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து உலகின் அதிவேக மின்சார காராக கருதப்படும் மாடல் எஸ் பிளேடு காரினை டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலோன் மஸ்க் மேடைக்கு ஓட்டிவந்து பார்வையாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார்.
அறிமுகம் செய்யப்பட்ட 3 மோட்டார் கொண்ட டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளேடு மின்சார கார் மணிக்கு 321 மீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
மேலும் வெறும் 2 வினாடிகளில் மணிக்கு கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் வேகத்தை அடைந்துவிடும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதுவரை உலகில் எந்த ஒரு மின்சார காரும் இந்த அளவிற்கு ஒரு வேகத்தைக் காட்டியது இல்லை.
இதன்மூலம் மெர்சிடீஸ், போர்சே போன்ற அதிவேக மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் மாடல் எஸ் பிளேடு கார் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் முக்கிய அம்சமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் விமானத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்டீயரிங் ((airplane-style yoke steering)) வாடிக்கையாளர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.
மேலும் காரின் எந்த பகுதியில் அமர்ந்து விளையாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள வீடியோ கேம் வசதியும், காரில் பொருத்தப்பட்டுள்ள 22 ஸ்பீக்கர்- 960 வாட் ஆடியோ சிஸ்டமும் ((22-speaker, 960-watt )) வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் ஆடம்பர காருக்குரிய அனுபவத்தை தரும்.
டெஸ்லா நிறுவனத்தின் மாடல் எஸ் பிளேடு காரின் விலையாக 1.29 லட்சம் டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 95 லட்சம் ரூபாய் ஆகும். மேலும் மின்சார காரான மாடல் எஸ் பிளேடு காரின் பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 627 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
Post a Comment
0 Comments