இனி வரும் நாட்களில் ஆன்லைன் வகுப்புகளை பள்ளி நிர்வாகம் வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலு்ம பதிவு செய்யப்பட்ட ஆன்லைன் வகுப்பு வீடியோக்களை பள்ளி நிர்வாகம், பெற்றோர், ஆசிரியர் பிரதிநிதிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டார்.
ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள்
மேலும் இதுகுறித்து முதலமைச்சர் அளித்த உத்தரவில், ஆன்லைன் வகுப்புகளுக்கு முறையான வழிகாட்டுதல்கள் வகுக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்கனர், சைபர் கிரைம், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான தடுப்பு பிரிவு அதிகாரிகள், உளவியல் நிபுணர்கள் ஆகிய உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை
மேலும் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையிலான பரிந்துரைகளை வாரத்திற்குள் தயாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் ஆன்லைன் வகுப்புகளில் முறையில்லாமல் நடந்துக் கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் உத்தரவிட்டார். மேலும் மாணவ, மாணவிகள் புகார் அளிக்க இலவச உதவி எண்களை உருவாக்கவும் அறிவுறுத்தினார். இதில் வரும் புகார்களை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
சிறையில் அடைத்து விசாரணை
சென்னை கே.கே.நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் அந்த பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொந்தரவு புகார்களை அளித்தனர். இதையடுத்து பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் ராஜகோபலனை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Post a Comment
0 Comments