Type Here to Get Search Results !

Live

-----------------------------------------------------------------
WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 ***************************************** ***********************************************

வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: மருத்துவர்

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்துச் செல்வதால் இதைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அதிக ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ. பவானந்தராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் அதிகரித்துள்ள கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், பி.சி.ஆர். பரிசோதனையை இரண்டு மடங்காக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் ஒரு தடவை மேற்கொண்ட பரிசோதனையை இனிவரும் காலத்தில் இரவு நேரத்திலும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாளாந்தம் 800 இற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கையாண்டு இந்தத் தொற்றிலிருந்து விடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Source: Thinakkural

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big