மலேசியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக வரும் ஜூன் 7ம் தேதி வரை ஒருமாத பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

(Image By Reuters)

இந்நிலையில் மலேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒருமாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் முஹைதீன் யாசின் அறிவித்துள்ளார். 

மாநிலங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை, மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கத்தால் கல்வி நிலையங்கள் இயங்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்களின் ஈத் பண்டிகையின் போது மக்கள் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இப்பொதுமுடக்கமானது ஜூன் 7ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.