Type Here to Get Search Results !

#LiveTamilTV

இம்மாதம் 30ஆம் திகதி வரை, அனைத்து மாகாணங்களுக்கிடையில் பயணம் செய்ய தடை!

எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானித்துள்ளார். 

ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மக்கள் ஒன்றுகூடும் அனைத்து கூட்டங்களையும் ரத்து செய்யவும் வர்த்தக நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் மற்றும் தங்கியிருக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தவும் ஜனாதிபதி பணித்துள்ளார். 

அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பகுதிகளை தனிமைப்படுத்துதல், போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



சமீபத்திய இடுகைகள்

6/recent/grid-big

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Pictures/grid-big