தமிழகத்தில் நாளை மறுநாள் (14ம் தேதி) ரமலான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒரு மாத நோன்பு தற்போது முடியும் நிலையில் உள்ளது.
பொதுவாக ஷவ்வால் மாதத்திற்கான பிறை தோன்றிய பின், அதை வைத்து ரம்ஜான் தேதி அறிவிக்கப்படும். இந்த நிலையில், இதுவரை பிறை தென்படவில்லை. ரமலான் பண்டிகைக்கான பிறை இன்று தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் பிறை தென்படாத காரணத்தினால் நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ரம்ஜான் பிறை தெரிந்த மறுநாள்தான் கொண்டாடப்படும். இன்று பிறை தெரியவில்லை. இதையடுத்து நாளைய தினம் இஸ்லாமியர்கள் எப்போதும் போல் நோன்பு இருக்க வேண்டும்.
ஆகவே தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை நாளை மறுநாள் கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளார்.