Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ -------------------------------------------------------------------------------- ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
---------------------------------------------------------------------------------

ஒன்ராறியோ மாகாணம் அரசு பொதுமக்களுக்கு விடுத்த எச்சரிக்கை!

ஒன்ராறியோவில் அமுலுக்கு வந்துள்ள வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை மீறுவோருக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை அடுத்து, ஒன்ராறியோவில் வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவு கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி அதிகாலை 12 மணி 01 நிமிடத்துக்கு நடைமுறைக்கு வந்துள்ளது.

நான்கு வாரங்களுக்கு இந்த முடக்க நிலை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவோருக்கு 750C$ டொலர் அபராதம் விதிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட், முடிந்தவரை அவசியமான காரணமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்றும், எமது செயற்பாடுகளைக் குறைத்துக் கொண்டு வீட்டில் இருப்பதே சரியானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கொரோனா பரவலடைய ஆரம்பித்ததிலிருந்து மூன்றாவது தடவையாக முடக்கல் நிலைக்கு ஒன்ராரியோ மாகாணம் செல்கின்றது.

இதேநேரம், ஒன்ராரியோ முதல்வர் டக்போர்ட், அண்மைய நாட்களில் மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சரவையில் ஆராய்ந்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இம்முறை கொரோனா விதிமுறைகள் மிக இறுக்கமாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big