Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகளுடன்: சினிமா அரங்குகள் மற்றும் பிற வணிகங்களுக்கு நிபந்தனைகள்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. 

இதன்படி தியேட்டர்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அமர்ந்து படம் பார்க்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் தற்போது புதிய தளர்வுகள் வெளியிடப்பட்டுள்ளன. 


அதில், இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாள்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

கடற்கரை பகுதிகளில் வார இறுதி நாள்களில் கூட தடை


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் கடற்கரைகளில் சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 10.4.2021 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும்/ தளர்வுகளும், 11.4.2021 முதல் நடைமுறைப் படுத்தப்படும்.

புதிய கட்டுப்பாடுகள்
i) சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து
அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

புதிய தளர்வுகள்

i) அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.


Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big