கொரோனா கிருமிப்பரவல் கட்டுப்பாட்டு விதிகளை மீறுவோரை மக்கள் கண்டிக்க வேண்டும் என்று நியூஸிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் அறிவுறுத்தியுள்ளார்.
ஆக்லந்து நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறை முடக்கம் நடைமுறைப்படுத்த நேர்ந்ததைச் சுட்டிய அவர், விதிகளை மீறுவோரை சகித்துக்கொள்ள முடியாது என்றார்.அண்மையில் கிருமித்தொற்றுக்கு ஆளான சிலர், தனிமைப்படுத்தும் உத்தரவை மீறியதாகவும், அவர்கள் சென்று திரும்பிய இடங்கள் பற்றி முழுமையான தகவல்களை வழங்கவில்லை என்றும் திருவாட்டி ஆர்டன் கூறினார்.
ஐந்து மில்லியன் மக்கள் தொகை கொண்ட நியூஸிலந்தில் 26 பேர் மட்டுமே கிருமித்தொற்றால் மாண்டனர். இருப்பினும், நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த, மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ஆர்டன் குறிப்பிட்டார்.
குடும்ப உறுப்பினரோ, சக ஊழியரோ கட்டுப்பாட்டு விதிகளை மீறினால், அவர்களை அன்போடு கண்டிக்குமாறு மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
Post a Comment
0 Comments