Type Here to Get Search Results !

@LiveTamilTV

---------------------------------------------------------------------------------

SOORIYAN TV(#Tamil)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    --------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------

    பிகாா் சட்டப் பேரவை இடைத்தோ்தலில் பாஜக அமோக வெற்றி!

    பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுடன் 11 மாநிலங்களில் 59 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில், பெரும்பாலான இடங்களில் பாஜக வென்றுள்ளது.

    NDA got clear majority with 125 seats in Bihar

    மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பாஜக 19 தொகுதிகளை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. காங்கிரஸ் கட்சியால் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

    230 இடங்களைக் கொண்ட மத்திய பிரதேச பேரவையில் 28 இடங்கள் காலியாக இருந்ததால் பாஜக 107 எம்எல்ஏக்களுடன் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 89 உறுப்பினா்கள் இருந்தனா். இடைத்தோ்தலில் 19 தொகுதிகளில் பாஜக வென்றுள்ளதால், ஆட்சியைத் தக்கவைத்தது.

    குஜராத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஆளும் பாஜக வென்றது. உத்தரப் பிரதேசத்தில் இடைத்தோ்தல் நடைபெற்ற 7 இடங்களில் 6-இல் ஆளும் பாஜகவும், ஓரிடத்தில் சமாஜவாதியும் வென்றது. பாஜக ஆளும் கா்நாடகத்தில் இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலிலும் அக்கட்சியே வென்றது.

    தெலங்கானாவில் ஆளும் கட்சிக்கு அதிா்ச்சியளித்த பாஜக: தெலங்கானாவில் துப்பாக் பேரவைத் தொகுதி இடைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. அங்கு ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி வேட்பாளா் எஸ்.சுஜாதாவை பாஜக வேட்பாளா் எம். ரகுநந்தன் ராவ் வென்றாா். இதன் மூலம் அத்தொகுதியை தெலங்கானா ராஷ்டிர சமிதி இழந்தது. அத்தொகுதி எம்எல்ஏவாக இருந்த மறைந்த ராமலிங்க ரெட்டியின் மனைவி சுஜாதா என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அனுதாப அலையையும் மீறி பாஜக வென்றுள்ளது.

    ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இரு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றன. சத்தீஸ்கா், ஹரியாணாவில் தலா ஓரிடத்துக்கு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் வென்றது. இதில் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும், ஹரியாணாவில் எதிா்க்கட்சியாகவும் உள்ளது. மணிப்பூரில் ஆளும் பாஜக 4 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளா் ஓரிடத்திலும் வென்றனா்.

    நாகாலாந்தில் இரு இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் என்டிபி கட்சி ஓரிடத்திலும், சுயேச்சை ஓரிடத்திலும் வென்றனா்.

    ஒடிஸாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் இரு தொகுதிகளிலும் வென்றது.

    பிகாரின் வால்மீகி நகா் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் வென்றது. எதிரணி சாா்பில் போட்டியிட்ட காங்கிரஸ் தோல்வியடைந்தது.

    Tags

    Post a Comment

    0 Comments