Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு பணியில் பெரிய பங்களிப்பு அளித்த பெங்களூரில் பிறந்த பெண் விஞ்ஞானி

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ளும், 'நாசா'வின் முயற்சியில், இந்தியாவில் பிறந்த பெண் விஞ்ஞானி, டாக்டர் சுவாதி மோகனுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உள்ளது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக, 'ரோவர்' என்ற ஆய்வு வாகனத்தை அனுப்பியுள்ளது, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா. கடந்தாண்டு, ஜூலை, 30ல், புளோரிடாவின் கேப் கேனவரல் விமானப்படை தளத்தில் இருந்து, இது அனுப்பி வைக்கப்பட்டது. செவ்வாய் கிரகத்தில், ஒரு செவ்வாய் கிரக ஆண்டு, அதாவது பூமியைப் பொறுத்தவரை, இரண்டு ஆண்டுகள், அங்கு சுற்றி, பல்வேறு ஆய்வுகளை, ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது.




செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா, அங்கு உயிரினங்கள் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்ற ஆய்வை ரோவர் வாகனம் மேற்கொள்ள உள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆய்வில், இந்தியாவில் பிறந்த, நாசா விஞ்ஞானி, டாக்டர் சுவேதா மோகனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது.

செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வு வாகனத்தை அனுப்பும் இந்த திட்டம், 2013ல் துவங்கியதில் இருந்தே அதில் ஈடுபட்டு வந்தார் சுவாதி. ஜி.என். அண்ட் சி எனப்படும் வழிகாட்டுதல், இயக்குதல் மற்றும் கட்டுப்படுத்துதல் பிரிவின் தலைவராக இருந்தார். ரோவர் வாகனம், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதற்கான தொழில்நுட்பத்தை, இவர் உருவாக்கியுள்ளார். 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சுவாதி, தன், 1 வயதில், அமெரிக்காவுக்கு சென்றார். பள்ளியில் படிக்கும்போது, குழந்தைகள் நல மருத்துவராக வேண்டும் என நினைத்துள்ளார். அதே நேரத்தில், 'ஸ்டார் டிரெக்' என்ற, 'டிவி' நிகழ்ச்சியைப் பார்த்து, புதிய உலகங்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. விண்வெளி ஆய்வில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுடன், ஆராய்ச்சி முடித்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளார். நாசாவின், சனி கிரகத்துக்கான பயணம், நிலவுக்கான பயண திட்டங்களிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big