Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

யாழ். நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வு!

 யாழ்ப்பாணம் நிலாவரை கிணறுக்கு அருகாமையில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது.

நிலாவரைக் கிணறு பகுதிக்கு இன்று (வியாழக்கிழமை) முற்பகல் சென்ற  தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மரம் ஒன்றின் கீழ் அகழ்வு நடவடிகையை முன்னெடுத்து ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.


குறித்த இடத்தில் புராதனக்கட்டடம் ஒன்று இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் அதுதொடர்பில் ஆய்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியிலும் தொல்லியல் திணைக்களத்தினர்!!

முன்னுக்குப் பின் முரணாக ஆய்வு செய்கின்றோம் எனவும் பின்னர் புல்லுச் செதுக்குகின்றோம் எனவும் கூறிக்கொண்டு நிலத்தினை அகழ்ந்தபோது பலர் சம்பவ இடத்திற்குச் சென்றதனால் அவர்கள் உபகரணங்களுடன் வெளியேறிச்சென்றனர்.

ஆய்வுப் பணிக்கான செலவு மதிப்பீட்டை தயாரிப்பதற்கான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது என்றும் செலவீட்டுக்கு அனுமதி கிடைத்ததும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big