எப்போ அரசியலுக்கு வருவார் என ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்க, இன்னொரு கூட்டம், அவர் அரசியலுக்கே வர மாட்டார் என ஆணித்தரமாக அடித்துச் சொல்லி கிண்டல் செய்து கொண்டிருந்தது.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 2017 டிசம்பர் 31 அன்று அரசியலுக்கு வருவேன் என்று கூறினேன்; ஜனவரியில் கண்டிப்பாக கட்சி தொடங்குவேன், கொரோனாவால் என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இயலவில்லை.
தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம் தான்: கொடுத்த வாக்கில் இருந்து நான் என்றுமே தவற மாட்டேன், நான் வெற்றியடைந்தாலும் அது மக்களின் வெற்றி: தோல்வியடைந்தாலும் அது மக்களின் தோல்வி, தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் நாள் வந்துவிட்டது: இப்போ இல்லைனா எப்போவும் இல்ல, ஆட்சி மாற்றம் நடக்கும்; அரசியல் மாற்றம் நடக்கும் என்றார்.
ஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பை தொடர்ந்து போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்கு அருகே ரசிகர்களும் தொண்டர்களும் பட்டாசு வெடித்தும் ஸ்வீட் கொடுத்தும் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.
Social Plugin
Social Plugin