மாவீரர் நாளை முன்னிட்டு நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் நினைவேந்தல்கள்!
2 பிள்ளைகள், மருமகன் என மூவர் போரில் மாவீரர்களாக உயிர்க்கொடை வழங்கிய நிலையில் அவர்களை நினைவேந்துவதற்கு தமது வீட்டின் முன்றலில் ஏற்பாடுகளை செய்த பெற்றோருக்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்று தடுத்துள்ளனர்.
இதனால் அவர்கள் வீட்டுக்குள் தமது பிள்ளைகள் மற்றும் மருமகனுக்கு படையல் படைத்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் பருத்தித்துறை – சுப்பர்மடத்தில் இன்று (27) மாலை இடம்பெற்றது.
அவர்களுடைய வீட்டுக்கு இன்று மாலை சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் வீட்டின் முற்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அலங்காரங்களைக் கழற்றுமாறு அறிவுறுத்தினர். அவற்றை வீட்டில் இருந்தவர்களைக் கொண்டு பொலிஸார் அகற்ற வைத்தனர்.
அத்துடன், வீட்டின் முன்பாக இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
வீடுகளில் சிறப்பாக மாவீரர்நாள் அனுஷ்டிப்பு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நேற்று (27) மாலை 6.5 மணிக்கு வீடுகளிலும் தனிப்பட்ட இடங்களிலும் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் மிக சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் சில வீடுகளில் அனுஷ்டிக்கப்பட்ட காட்சிகள்.
தங்களது வீட்டிலிருந்து மாவீரர்களுக்கான அஞ்சலியை செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்.
சி.வி.கே. சிவஞானம், மாவை சேனாதிராஜா, செல்வராஜா கஜேந்திரன், சி.வி. விக்னேஸ்வரன், அரியநேந்திரன், வ.பார்த்தீபன், தி.நிரோஷ், கஜேந்திரகுமார், சி.சிறிதரன், மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் தத்தமது வீடுகளில் இன்று (27) மாலை 6.5 மணிக்கு அனுஷ்டித்தனர். மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி மறுத்த ஶ்ரீலங்கா அரசுக்கு கடைகளை பூட்டி எதிர்ப்பு தெரிவித்த புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு வர்த்தகர்கள்.
Post a Comment
0 Comments