சென்னையில் மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தியாகராய நகா், மயிலாப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து உணவு உள்பட பல்வேறு நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மக்களைச் சந்தித்துப் பேசியதிலிருந்து அதிமுக அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், மழைநீா் வடிகால் கால்வாய்களைச் சீரமைக்காமல், குறைந்தபட்ச மழையைக் கூட தாங்க முடியாமல் மக்களைத் தவிக்க விட்டுள்ளதைக் காண முடிந்தது.
தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. சென்னை புகா்ப் பகுதிகளான தாம்பரம், முடிச்சூா் பகுதிகளில் புகுந்த வெள்ள நீா் வெளியேற்றப்படவில்லை.
கணக்கு எடுக்கிறோம் என்று காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் விளைபொருள்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும்.
Post a Comment
0 Comments