Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

தமிழகத்தில் தொடரும் கனமழை - பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வலுத்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரித்துள்ளது. பழைய கட்டிடங்களில் தங்குவது கூடாது, நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எச்சரிக்கை வருமாறு:

''தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால். கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

— TN SDMA (@tnsdma) November 16, 2020

வெள்ளக் காலங்களில் பொதுமக்களுக்கு ஓர் வேண்டுகோள்.

பின்வரும் பொருட்களை தங்களுடன் வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது . மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் ஒரு வாரத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் , எரிவாயு, மண்ணெண்ணெய், மருந்து, பேட்டரிகள், டார்ச்கள், முகக்கவசங்கள்.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம். அவ்வாறு பழைய கட்டிடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால், பொதுமக்கள் யாரும் ஆற்றில் குளிக்கவோ மற்றும் கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது”.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர காணொலி மூலமாகவும் தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big