Type Here to Get Search Results !

Live

WeLComeToSOORIYAN
@Sooriyantv2024 *****************************************

பெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்கு: கத்தார் அரசு

கத்தார் தலைநகர் டோஹாவிலிருந்து (Doha) புறப்பட வேண்டிய 10 விமானங்களில் இருந்த பெண் பயணிகளிடம் பலவந்தமாகச் சோதனை நடத்தியவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்படுமெனக் கத்தார் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டோஹா விமான நிலையக் கழிப்பறையில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று கைவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரசவித்த அறிகுறிகளின் தொடர்பில் பெண் பயணிகள் சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டனர்.

சோதனைகளால் அவர்கள் அனுபவித்த அவமானத்திற்கு கத்தார் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வருத்தம் தெரிவித்தனர்.

சோதிக்கப்பட்ட பெண் பயணிகளில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 13 பேரும், பிரிட்டனைச் சேர்ந்த இருவரும், நியூசிலந்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.

அதனை அடுத்து, கத்தாருக்கும் மூன்று நாடுகளுக்கும் இடையே அரசதந்திரப் பூசல் உருவாகியுள்ளது.



Tags

Post a Comment

0 Comments

Click To Here On Every Day For Development

Phots Shot

8/Photography/grid-big