அமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளராக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
மெரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் இருப்பதால் தபால் மூலம் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பல லட்சக்கணக்கானோர் தபால் மூலம் வாக்களித்துவிட்டனர். ஆனால், தபால் வாக்கு முறைக்கு அதிபர்டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று காலையில் வாக்குச் செலுத்தினார். ஃப்ளோரிடாவில் உள்ள கிழக்கு பால்ம் கடற்கரையில் அவர் வாக்குச் செலுத்தினார். இப்பகுதியில் ட்ரம்புக்கு சொந்தமான தனியார் கிளப் இருக்கிறது.
வழக்கமாக டொனால்ட் ட்ரம்ப் நியூ யார்க்கில்தான் வாக்கு செலுத்துவார். ஆனால் கடந்த ஆண்டு ட்ரம்ப் தனது இல்லத்தை ஃப்ளோரிடாவுக்கு மாற்றிவிட்டார். அவர் வாக்களிக்க வந்த நூலகத்திற்கு வெளியில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் கட்சிக் கொடியுடன் கூடி கோஷம் போட்டனர்.
வாக்குச்செலுத்தும் வரை மாஸ்க் அணிந்திருந்த ட்ரம்ப், செய்தியாளர்களிடம் நெருங்கியதும் மாஸ்கை கழற்றிவிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ட்ரம்ப் என பெயர் வைத்திருந்த ஒரு நபருக்கு வாக்கு செலுத்தினேன்” என்று கூறினார்.
அதிபர் ட்ரம்புக்கு இன்று மிகவும் பிசியான நாள். வடக்கு கரோலினா, ஓஹியோ, விஸ்கான்சின் ஆகிய இடங்களில் இன்று நடக்கவிருக்கும் பொதுக்கூட்டங்களில் ட்ரம்ப் பங்கேற்கவிருக்கிறார்.
Post a Comment
0 Comments