Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்து தடை தவறானது- மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என்று அந்த நாட்டின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான சிறப்பு ஆணையம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது


தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது - வழக்கில் அதிரடி தீர்ப்பு

இங்கிலாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது.

 

சஜித் ஜாவித் நிராகரிப்பு

சஜித் ஜாவித் நிராகரிப்பு

இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் நிராகரித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசு அப்பீல்

நாடு கடந்த தமிழீழ அரசு அப்பீல்

இதனையடுத்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், புலிகள் மீதான தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தது. இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் - Proscribed Organisations Appeal Commission இந்த மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.

புலிகளுக்காக வாதம்

புலிகளுக்காக வாதம்

இந்த வழக்கு விசாரணையில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதத்தில் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் இல்லை என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சார்பில் வாதிடப்பட்டது.

புலிகள் மீதான தடை தவறு

புலிகள் மீதான தடை தவறு

இந்த மேல்முறையீட்டு வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கிய சிறப்பு ஆணையம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை இந்த சிறப்பு ஆணையம் இன்று வழங்கியது. இத்தீர்ப்பின் அடிப்படையில் இங்கிலாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் பாராட்டு

சீமான் பாராட்டு

இந்த தீர்ப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பிரித்தானியா நீதிமன்றம், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதானத் தடையை நீக்கியுள்ள செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட இனமானத் தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big