Type Here to Get Search Results !

ssss

Tel: 0039 123 45 789 | Email: info@Sooriyantv.Ca

--------------------------------------------------------- -------------------------------------------------

ஊறுகாய் சாப்பிட்டதால் உயிரிழந்த பெற்றோர்!

ரஷ்யாவில் விஷம் கலந்த ஊறுகாய் சாப்பிட்டு இறந்த' பெற்றோரின் உயிரற்ற உடல்களுடன் இரண்டு சிறு குழந்தைகள் மூன்று நாட்கள் உயிருடன் இருந்த சம்பவம்
பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் லெனின்கிராட் ஒப்லாஸ்டில் உள்ள தொடர் மாடி வீட்டில், குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.



The 'perfect couple' are suspected of dying after eating 'poisoned pickles', local media reports



திரு. அலெக்சாண்டர் வயது 30, மற்றும் திருமதி விக்டோரியா யாகுனின் வயது 26,ஆகியோர் குறித்த தொடர் மாடி வீட்டில், தமது  ஐந்து வயது பெண் குழந்தை, மற்றும் ஒரு வயது ஆண் குழந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த தம்பதியினர் உட்கொண்ட ஊறுகாய் விஷமானதையடுத்து அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குழந்தைகள் இருவரும், மூன்று தினங்கள் சடலங்களுடன் இருந்துள்ளனர். இதனிடையே விக்டோரியா யாகுனின் உறவினர் ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், பெண் குழந்தை அதற்கு பதில் அளித்துள்ளார்.


Alexander Yakunin (pictured with his two children) and his wife were found dead in bed


இதன் போது, தமது தாய் மற்றும் தந்தை நீண்ட நேரம் 'தூங்கிக் கொண்டிருக்கிறான்' என்றும், தாயின் உடல் அனைத்தும் கறுப்பாக மாற்றிவிட்டது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து  சந்தேகித்த உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதுடன் பொலிஸாரின் உதவியுடன் குழந்தைகளை மீட்டுள்ளார்.

மூன்று தினங்களும் ஐந்து வயது பெண்குழந்தை தமது ஒரு வயது சகோதரனை பராமரித்து வந்துள்ளார்.


Neighbour Mikhail Khomchenko said of the couple: 'I have only positive feelings about them'



சம்பவம் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது, 

எரிவாயு ஆலைத் தொழிலாளி ஒருவர் யாகுனினுக்கு இறப்பதற்கு முதல் நாள் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஊருகாய் போத்தல் ஒன்றை வழங்கியுள்ளார்.

குறித்த ஊருகாய் போத்தல்  சமையலறையில் திறந்திருந்து வைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஊருகாய்  உட்கொண்டதையடுத்து ஊறுகாயிலிருந்து வரும் போட்லினம் நஞ்சுதான் மரணத்திற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

போட்லினம்  நச்சு மூலம்  முடக்கம் மற்றும் சுவாசக் கோளாறு மூலம் மரணம் கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த தம்பதியினர் உயிரிழப்பிற்கும் இது காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இவர்கள் இடையே வேறு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும்  குழந்தைகளை யாகுனின் தந்தை பராமரித்து வருகிறார்.

சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big