Type Here to Get Search Results !

விவசாயி வீட்டில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து வியந்த கிராம மக்கள்.

Image
விவசாயி வீட்டில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து வியந்த கிராம மக்கள். 
கொடைக்கானல் அருகே வில்பட்டி விவசாயி வீட்டில் மிகப்பெரிய வண்ணத்துப் பூச்சியைப் பார்த்து கிராம மக்கள் வியந்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் பலவிதமான விலங்குகள், பறவைகள் மற்றும் பூச்சி இனங்கள் அடர்ந்த வனப் பகுதியில் வசித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான வில்பட்டியில் விவசாயி நாட்ராயன் என்பவரது வீட்டில் அழகிய வண்ணத்துப் பூச்சி இருந்துள்ளதைப் பார்த்துள்ளார்.
இந்த வண்ணத்துப் பூச்சியானது 25 அங்குலம் அளவு பெரிய வண்ணத்துப் பூச்சியாக இருப்பதைப் பார்த்து வியப்படைந்தார். மேலும், இந்த வண்ணத்துப் பூச்சியை அப்பகுதியிலுள்ள கிராம மக்கள் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இந்தப் பூச்சியானது அப்பகுதியில் ஆங்காங்கே பறந்து சென்றதை மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர். ஆனால், அவை நீண்ட தூரம் பறக்கவில்லை ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்த மெகா அளவு வண்ணத்துப் பூச்சியானது கொடைக்கானல் அப்சர்வேட்டரி, ஏரிச்சாலைப் பகுதிகளில் பார்த்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கு முன் பார்த்த வண்ணத்துப் பூச்சிகள் சிறியதாகவும், ஓரளவிற்கு பெரிதாக இருந்துள்ளது. ஆனால், தற்போது இந்த மெகா அளவு வண்ணத்துப் பூச்சியை  இதுவரையில் பார்த்ததே இல்லை என மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் பகுதியிலுள்ள விஞ்ஞானி ஒருவர் கூறியதாவது,

'தற்போது காணப்பட்ட வண்ணத்துப் பூச்சியானது உலகிலேயே, பெரிய அளவு (25 அங்குலம்) கொண்டதாக உள்ளது. இதற்கு அட்லஸ் பூச்சி எனப் பெயர். இதனுடைய ஆயுட் காலம் வெகு குறைவே' என தெரிவித்தார்.

Cine Mini

8/sgrid/CineMini
pe_63279890_773782650
pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650