400 ரூபாய் கேக்கை கொடுத்து 4 ஆயிரம் வாங்கி விட்டார்கள் நான் பெத்த பிள்ளைகள் என்று ஜாலியாக பதிவிட்டுள்ளார் நடிகர் சூரி.
நடிகர் சூரி சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினர். அவருக்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் வாழ்த்து கூறினார்கள். அவர்களுக்கு எல்லாம் சூரி ட்விட்டரில் நன்றி கூறி இருந்தார்.
கொரோனா காரணமாக சினிமா ஷூட்டிங் எதுவும் நடைபெறவில்லை என்பதால் சூரி தன்னுடைய குடும்பத்தினருடன் தான் நேரத்தினை செலவிட்டு வருகிறார். அவர் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.
அவரது குழந்தைகள் சற்று வித்தியாசமான ஒரு கேக்கை அவருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதில் ‘கேக் செலவு 1500, பெட்ரோல் செலவு 500, டெக்கரேஷன் செலவு 2000, மொத்தம் 4000. மொத காசை எடுத்து வெச்சிட்டு கேக்கை வெட்டு” என அதில் எழுதி இருக்கிறார்கள்.
“400 ரூவா கேக்கை கொடுத்துபுட்டு 4000 ரூவாய வாங்கிட்டாங்க நான் பெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.. தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என சூரி அது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.
சூரிக்கு வெண்ணிலா என்ற மகளும், ஷ்ரவன் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் இருவரும் செய்யும் அட்ராசிட்டியை பற்றி ட்விட்டரில் எப்போதும் சூரி அதிகம் பதிவிட்டு வருகிறார். கொரோனா லாக் டவுன் நேரத்தில் அவர் தனது குழந்தைகள் செய்யும் பல்வேறு விஷயங்கள் பற்றி வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment
0 Comments