விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மீனாவுக்கு சமூகவலைத்தளங்களிலும் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த மீனா தான் இப்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் செல்ல மருமகள்.
இவரின் நிஜப்பெயர் ஹேமா ராஜ் குமார். ஆரம்பத்தில் குடும்பத்தை பிரிக்க வந்த வில்லி போலவே மீனாவின் கதாபாத்திரம் இருந்தாலும் இப்போது மீனா குடும்பத்தில் ஒன்றி விட்டது போல் கதை காட்ட தொடங்கி விட்டனர்.
இணையத்தில் மீனாவின் டப் மேஷ் வீடியோக்களும் ட்ரெண்டடித்து வருகிறது. நன்றாக தமிழ் பேச தெரிந்த சீரியல் நடிகை என்பதால் மீனாவை இயக்குனர்கள் தேர்வு செய்கின்றனர். திருமணமான மீனா, குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு சீரியலிலும் நடித்து வருகிறார். இவரின் மாமியார் தான் இவருக்கு மிகப் பெரிய பலமாம்.
MCA முடித்துவிட்டு திரை துறைக்கு வந்த மீனா நிறைய ஃபோட்டோ ஷூட் நடத்துவதில் ஆர்வம் கொண்டவர்.பாயும் புலி, ஆறாது சினம், சவரகத்தி போன்ற பெரிய திரையிலும் மீனா முகம் காட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லாக்டவுனின் வீட்டில் இருக்கும் மீனா தான் நிஜத்திலும் கர்ப்பமாக இருப்பதாக ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொல்லி இருக்கிறார். மீனாவின் சமீபத்திய ஃபோட்டோ ஷூட் படங்களை பார்க்கலாம் வாங்க.
Post a Comment
0 Comments