பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!!! - உலகத்தமிழர்களின்ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV sooriyan.tv

உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #LiveTamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, SOORIYAN TV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Home Top Ad

Post Top Ad

Your Ad Spot

Top Avd

middle ad

May 13, 2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!!!

 தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் (pollachi sexual assault case) குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்றும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபணம் ஆகியுள்ளது என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவர்கள் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார். பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்த நிலையில், கோவை மகளிர் நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு அளித்துள்ளது. அண்ணா அடிக்காதீங்க என்ற இளம்பெண்ணின் அலறல் சத்தம் அடங்கிய வீடியோ தமிழ்நாட்டையே நடுங்க செய்திருந்தது. இன்று தீர்ப்பு என்பதால் கோர்ட் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு இன்று அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தீர்ப்பு அளித்தார். 9 பேரும் குற்றவாளிகள் எனவும், கூட்டு பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாட்டையே உலுக்கும் வகையில் அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது, கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இளம்பெண்களைக் குறி வைத்து பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டிய கும்பலின் கொடூரம் நடைபெற்றது. கோவை பொள்ளாச்சி வழக்கு இளம் பெண் ஒருவரின் புகாரின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு ஒப்படைத்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (வயது 30), வசந்தகுமார் (32), சதீஷ் (33), மணிவண்ணன் (30), திருநாவுக்கரசு (30), ஹேரேன் பால் (34), பாபு என்ற பைக் பாபு (38), அருளானந்தம் (38), அருண்குமார் (36) என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

( JUSTIN | பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை குற்றவாளிகள் )

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முழுவதும் காணொலி முறையில் நடத்தப்பட்டு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீதும் 2019 மே 21ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இன்று தீர்ப்பு பின்னர் வழக்கின் விசாரணை தாமதம் ஆனதால், ஹைகோர்ட் உத்தரவையடுத்து, கோவை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சி விசாரணை முடிந்ததையடுத்து, இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கேள்விகள் கேட்பதற்காக, 9 பேரும் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்கள் முடிவடைந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் தரப்பில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்த நிலையில், மே 13 (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது. இதன்படி, இந்த வழக்கில் இன்று(13) தீர்ப்பு அளிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Ad

Your Ad Spot