வட்வரி(VAT Tax) தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்.
#வட் வரி அதிகரிப்பானது மிகவும் பொருளாதார இக்கட்டான நிலையிலுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது. மக்களுக்கு வருமானம் இல்லை மக்களின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அறகல போராட்டம் போன்ற அரசுக்கு எதிராக மக்கள் கிளந்தெழும் போராட்டத்திற்கு வழியேற்படும், சர்வதேச நாணய நிதியத்திற்காகவே செயற்படுகிறது. சுயமாக மக்களின் நலன்களை பற்றி அரசு சிந்திப்பதில்லை
தேர்தல் பிரச்சாரத்திற்கான ஆயத்தமாகவே ஜனாதிபதி வருகை உள்ளது. பிரச்சனையை பாராளுமன்றத்திலே தான் தீர்க்க முடியும் என்கிறார்.கட்டிடம் கட்டி தாறன் கைத்தொழில் பேட்டை அமைக்கிறேன் என்று மாத்திரம் சொல்லதான் வருகிறார்.வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கிய காசுக்கு ஒன்றும் நடைபெறவில்லை கடந்த வரவு செலவுத்திட்டத்தில் தேர்தலுக்கு ஒதுக்கிய ஆயிரம் மில்லியன் ரூபா தேர்தலும் நடைபெறவில்லை. தமிழ் மக்களின் ஆதரவை எப்படி பெறுவது என்ற நோக்கத்தோடு தான் வருகிறார்.
Social Plugin
Social Plugin