அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் வழமையான செயற்பாடுகளை நாளை முன்னெடுக்க முடியும்! இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கை அறிவித்த அரசு. - உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! எழுச்சி கொள் தமிழா! Tamil TV Channel #SOORIYANTV #TamilTV #sooriyantv

LiveTamil TV: உலகத்தமிழர்களின் ஒளிவீச்சு! Tamil TV Channel!! எழுச்சி கொள் தமிழா! #SOORIYANTV #TAMILTV #TamilTVChannel on IPTV, #tamiltv #TamilTV, #sooriyantv #livetamiltv #LiveTamilTV #TamilTV, #TamilIPTV, எழுச்சி கொள் தமிழா! SOORIYANTVHD – SOORIYAN TV HD – TAMIL LIVE MOVIES, SOORIYAN TV, TAMIL TV Watch Now. SOORIYAN TV HD. #reels, #reels, #teaser, #viralvideos, #webseries, #originalshorts, #hit, #superhit, #latest, #trend, #trendingshorts, #trendingvideo, #drama, #action, #fyp, #fyppp,

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.

Top Avd

middle ad

Apr 2, 2022

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் வழமையான செயற்பாடுகளை நாளை முன்னெடுக்க முடியும்! இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கை அறிவித்த அரசு.

இராஜதந்திர பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தமது வழமையான செயற்பாடுகளை நாளைய தினம் முன்னெடுக்க முடியும் என சிரேஷ்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


அவர்கள் தமது பணியிட அடையாள அட்டையை பயன்படுத்தி ஊரடங்கு சட்ட காலத்தில் பயணிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடளாவிய ரீதியில் இன்று மாலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேநேரம், திட்டமிடப்பட்ட வகையில் இன்றைய தினம் தொடருந்து போக்குவரத்து இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், நாளைய தினம் தொடருந்து போக்குவரத்து இடம்பெறாது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவைகள் இன்றைய தினம் திட்டமிடப்பட்ட வகையில் இடம்பெறும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எனினும், தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் இன்றிரவு 7 மணி வரையில் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, விமான நிலையங்களுக்கு பிரவேசிப்போர் பயண சீட்டு மற்றும் கடவுச்சீட்டு ஆகியனவற்றை பயன்படுத்தி ஊரடங்கு காலத்தில் பயணிக்க முடியும்.

அத்துடன் விமான நிலையங்களில் இருந்து வீடு திரும்புவோர்; விமான பயண ஆவணங்களை பயன்படுத்தி ஊரடங்கு காலத்தில் செல்ல முடியும் என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று மாலையுடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் வாராந்த சந்தைக்காக தயார்ப்படுத்தப்பட்ட மரக்கறிகளை விற்பனை செய்வதில் வர்த்தகர்களும், விவசாயிகளும் எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவித்து வரும் மக்கள் நாளை பெரிய அளவிலான போராட்டம் நடத்த அறிவித்திருந்த நிலையில் இன்று மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊடரங்கை அறிவித்தது இலங்கை அரசு.

இலங்கையில் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் சொல்லொண்ண முடியாத துயரத்திற்குள்ளாகியுள்ளார்கள்.

பெரும் வருவாயை கொடுக்கும் சுற்றுலாத் துறை முடக்கப்பட்டதால் அன்னிய செலாவணி இருப்பும் குறைந்து இலங்கையின் ரூபாய் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. பால், காய்கறிகள், ரொட்டி உள்ளிட்டவற்றின் விலை 3 அல்லது 4 மடங்கு வரை உயர்ந்துள்ளது.

இதை கண்டித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் வீட்டிற்கு வெளியே வியாழக்கிழமை இரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும் அவர் பதவி விலக கோரி நடந்த போராட்டத்தால் இலங்கையில் வன்முறை மற்றும் குழப்பம் ஏற்பட்டது.

போராட்டம் வன்முறை

போராட்டம் வன்முறை

இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறையால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமலாகியுள்ளது. எனினும் போராட்டம் கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து
இலங்கையில் அமைதியின்மை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பெரிய போராட்டம்

பெரிய போராட்டம்

இந்த நிலையில் நாளை பெரிய போராட்டம் நடத்த மக்கள் அழைப்பு விடுத்திருந்தனர். ஏற்கெனவே நடத்தப்பட்ட போராட்டத்தால் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போது பெரிய போராட்டத்தால் அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவை இலங்கை அரசு அமல்படுத்தியுள்ளது.

இன்று மாலை முதல் ஊரடங்கு

இன்று மாலை முதல் ஊரடங்கு

இலங்கையில் இன்று(2) மாலை 6 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

கனடா

5/col-left/Canada
4/feat-big/

பல்சுவை

Photography

4/grid-big/

நிகழ்வுகள்

4/sgrid/Events

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

Slider Images

Post Top Avd

Alert Messages

Click on the "x" symbol to close the alert message.

× Alert! Our Live SOORIYAN TV 01 M3U8 Link Was Changed It. Please Contact Us. Or Contact Our Inbox.
Your Ad Spot